இந்திரன் சாபவிமோசனம் பெற்ற தலம். கௌதம முனிவரிடம் சாபம் பெற்ற இந்திரன் தனது சாபம் நீங்குவதற்கு இங்கு வந்து வழிபட்டான். அவனது சாபம் நீங்கி ஆயிரம் கண்கள் பெற்றதால் 'திருக்கண்ணார் கோயில்' என்று பெயர் பெற்றது. குறுமாணியாகிய (சிறிய பிரம்மச்சாரி - வாமனர்) சிவபெருமானை வழிபட்ட தலமாதலால் 'குறுமாணிக்குடி' என்றும் அழைக்கப்பட்டு, பின்னர் தற்போது 'குறுமாணக்குடி' என்று மருவியது.
மூலவர் 'கண்ணாயிரநாதர்' என்னும் திருநாமத்துடன், உயரமான பாணத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'முருகுவளர் கோதைநாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கோயில் எதிரில் உள்ள குளத்தில் (இந்திர தீர்த்தம்) நீராடி சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தொடர்புக்கு : 94422 58085.
|